June 11, 2009
Balaji Srinivasan
Humor
No Comments
A new category where we just say WTF to news like the one below:
முத்தாய்ப்பாக, ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு பிறகு தீவுத் திடலில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழாவில் பொதுக்கூட்டத்தில், மற்றவர்களை விட ஸ்டாலினை ஏகத்துக்கும் தூக்கி வைத்தார் துரைமுருகன்.
“ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்து யார் என்று நம் தலைவர் அடையாளம் காட்டிவிட்டார். மத்தியில் நம் புகழ் எட்டியுள்ளது. அடுத்து ஐ.நா. சபை வரை நம்மை தளபதி (ஸ்டாலின்) கொண்டு செல்வார்” என்று ஒரே போடாகப் போட்டார் துரைமுருகன். இது கேட்டு ஸ்டாலின் பூரித்துப் போய்விட்டார்.
(துக்ளக்)
Earlier: 1 , 2
June 7, 2009
Balaji Srinivasan
Sports
2 Comments
He is the greatest of all time. If you are caught up in Federer mania like I am and are reading every article written today, I will urge you to read the best article I’ve read on Federer, by David Foster Wallace in NY Times. This was written in 2006.
May 26, 2009
Balaji Srinivasan
Humor
1 Comment
A new category where we just say WTF to news like the one below:
‘அழகிரிக்கு அறுபது ஆகப்போகிறது. இப்போது கூட கேபினெட் பதவி வாங்காவிட்டால் அப்புறம் எப்படி?’ என்று கண்கலங்கினார் முதல்வரோடு சென்றிருந்த அவர் மனைவி தயாளு அம்மையார்…
”மகள் கனிமொழியையும் ராசாத்தி அம்மாளையும் அழைத்துப் பேசியபோது, ‘மூன்று கேபினெட் பதவிகள் எப்படியும் வாங்கிவிட முடியும்’ என்பதை உறுதியாகச் சொன்னதோடு, ‘அந்த மூன்றில் யாருக்கெல்லாம் இடம்’ என்று சொன்னாராம். ‘நீ என்னம்மா நினைக் கிறே?’ என்றும் கேட்டாராம். ராசாத்தி அம்மாள், ‘வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்…’ என்று வேண்டினாராம்.
(ஜூனியர் விகடனிலிருந்து…)
Earlier: 1
May 24, 2009
Balaji Srinivasan
Humor
3 Comments
A new category where we just say WTF to news like the one below:
சரத்குமாருக்கு சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தோடு சூப்பர் ஹீரோ என்ற பட்டத்தையும் சூட்டியிருந்தனர் ரசிகர்கள். இந்த நிலையில் விக்ரம் புதிதாக நடிக்கும் ‘கந்தசாமி’ படத்தில் விக்ரமுக்கு ‘சூப்பர் ஹீரோ’ என பட்டம் அளித்திருக்கிறார்கள். இதைக் கண்டு கடுப்பான சரத்குமாரின் அ.இ.ச.ம.க. கட்சிக்காரர்கள் நெல்லையில் ‘கந்தசாமி’ படத்தைத் திரையிடுவதற்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது என்று முடிவு செய்துள்ளார்களாம்!”
(ஜூனியர் விகடனிலிருந்து…)
March 26, 2009
Balaji Srinivasan
Humor
1 Comment
During the last election, we had a lot of fun running an irreverent election blog, Hot Machi Hot. It got more than a lakh hits and was widely appreciated at that time.
Now that the national elections are around the corner, we’ve resurrected the blog. We will add new content there leading up to the election time.
Click here to access it: http://hotmachihot.blogspot.com/ .
January 14, 2009
Balaji Srinivasan
Music
1 Comment
எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
புது வருடம், புது ஆரம்பம். சென்ற வருடம் மிக வேகமாக சென்றுவிட்டது. பல நாட்களாயிற்று புதிதாக வந்த பாடல்களைக் கேட்டு. அவ்வப்போது டி.வியில் பார்த்தால் சரி. நேரம் கிடைத்த போதெல்லாம் கர்னாடக இசையையே கொஞ்சம் கேட்டேன். சினிமா பாடல்களைக் கேட்க ஏதோ ஒரு ஆயாசம். அப்படியே கேட்டாலும் பல்லவி முடிந்தவுடன் சரணத்தை கேட்க பொறுமை இல்லாமல் அடுத்த பாடலுக்கு செல்லும் அவசரம். அப்படி ஒரு சுழற்சி 2008-இல்.
புதிய வருடத்தில் விட்டதை பிடிக்கலாம் என்று ஆரம்பித்து பல பாடல்களை என் ஐபாடில் ஏற்றினேன். நீண்ட பயணம் ஒன்றில் எல்லா பாடல்களையும் கேட்க, மனதில் நின்றதோ இரண்டு பாடல்கள் தான். ஜோதா அக்பரில் “க்வாஜா”வும் நான் கடவுளில் “கண்ணில் பார்வை”யும்.
இந்த இடைவேளையில் ஒரு பாட்டை ரசிக்கும் தன்மையும் அதை சீர்தூக்கி பார்க்கும் விதமும் வெகுவாக மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. முன்பெல்லாம், ஒரு பாட்டில் இருக்கும் விஷயங்களை வைத்துத் தான் அதை எடை போட்டேன் போலும். அதில் வரும் பின்னணி இசையோ, பாடகர்களின் குரலோ, பாட்டின் வரிகளோ.. அவற்றை ஆழமாக கவனித்து ரசிப்பேன். எத்தனையோ பாடல்களை இளையராஜாவின் இசைக்காகவும் எஸ்.பி.பியின் குரலுக்காகவும் மணிக்கணக்காக கேட்டது இதனால் தான்.
இப்போதோ அதெல்லாம் முக்கியமில்லை என்பது போலத் தோன்றுகிறது. பாடல் என்னை பாதிக்க வைக்க இவை எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது, பாடலோடு முடிவடைவதில்லை. அதைத் தாண்டி, என்னுள்ளில் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த உள்ளுணர்வைத் தூண்டுகிறது. இது முற்றிலும் subjectiveஆன விஷயம். பாடலை ரசிப்பதில் உள்ள objectivity இம்மியளவு கூட இல்லாமல் மறைந்து போய் விட்டது போல ஒரு பிம்பம்.
“கண்ணில் பார்வை” ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல். இது போல எத்தனையோ பாடல்களை ராஜா இசையமைத்திருக்கிறார். சோகத்தை பிழிய வைத்து, உருக வைக்கும் ஆற்றல் கொண்ட பாடல்கள். ஆரம்பமே ஒரு ஒற்றை சாரங்கியின் மிதமான இசை. கண் பார்வையற்ற ஒரு பெண்ணின் சோகத்தை சொல்லும் சாதாரண வரிகள் (வாலிக்கு வாலண்டரி ரிடையர்மண்ட் தேவை!). இன்னும் செய்திருக்கலாமே என்று சொல்லத் தூண்டும் இசைக் கோர்ப்பு. சரணத்தை அடையும்போது ஏற்கனவே கேட்ட ஒரு ஆயாசம். இதையெல்லாம் objectiveஆக பார்த்தாலும், இதையெல்லாம் தாண்டி, ஆழ்மனதை தொட்டு, நான்கு நாட்களாக நினைவை விட்டு அகலாத பாட்டாகி விட்டது.
இம்மாதிரியான சோகப் பாடல்களை ரசிக்க அவற்றின் பின்புலமாக இருக்கும் படம் நம்மை பாதித்திருக்க வேண்டும். அப்படி ஆகாத போது, எத்தனை நன்றாக இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சிங்காரவேலனில் கூடத் தான் ஒரு சோகப் பாடல் வரும். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். “கண்ணில் பார்வை” கேட்கும்போது அதன் கூடவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பும் சேர்ந்து அதனால் தானோ என்னவோ மனதில் தங்குகிறது. பாலாவின் படங்களில் ஒரு காவிய சோகம் தென்படும். தன் தாய் தன்னை எப்போதும் கொலைகாரனாகவே பார்க்கும் மகனின் ஆதங்கம், நந்தாவின் கடைசி காட்சி வரை மையமாக வரும். தகனம் செய்யப்படும் உடல்களின் நடுவில் உறங்கும் சிறுவனின் பிம்பம், ஆரம்பத்திலேயே பிதாமகன் படத்தின் பின்புலமாக நிற்கும். பாலாவின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஜெயமோகனின் ஏழாம் உலகம் போல. ஏழாம் உலகம் சித்தரிக்கும் உலகம் நாம் அறியாத ஒன்று. அறிந்தாலும் அதன் அவலத்தைப் பற்றி நினைக்காமல் இருந்துவிடுவோம். நினைத்தால் தொண்டை வரண்டு விடும் அளவிற்கு உள்ள அவலம். அத்தகைய படமாக இருக்கும் “நான் கடவுள்”. இது வரை இந்த படத்தை பற்றி படித்ததெல்லாம், இது ஏழாம் உலகத்தைப் போல ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சித்தரிக்கும் போலத் தோன்றுகிறது. காசியில் வாழும் அகோரிகளின் வாழ்க்கை இதற்கு முன் எந்த படத்திலும் நாம் பார்த்திராத ஒன்று. கங்கையில் மிதக்கும் பிணங்களின் மிச்சத்தை உண்ணும் அகோரிகர்களின் வாழ்க்கை தான் என்ன! (இதை அப்படியே நேரடியாக படத்தில் காட்ட முடியுமா என்பது சந்தேகம் தான்). நம்முடைய கோட்பாடுகளும் கலாச்சாரத்தின் வாயிலாக அவர்களை எடை போடும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருப்பதனால் தானோ என்னவோ, “கண்ணில் பார்வை” பாடல் என்னை பாதித்துவிட்டது.
December 4, 2008
Balaji Srinivasan
Humor
2 Comments
I saw this google supplied ad in orkut today. Check out the first ad listing
(any guesses on whether I clicked through on it?)

November 17, 2008
Balaji Srinivasan
Humor
No Comments
இந்த முறை அமெரிக்காவில் நான் கண்ட மாற்றங்கள் இவ்விவை: யுத்த வெற்றிப் பரவசத்தில் இருக்கிறார்கள். தினம் வீரர்களுக்கு ஏதாவது ஒரு முனிசிபாலிட்டி வரவேற்பு. புஷ் புகழின் உச்சத்தில் இருக்கிறார். வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு அவரை எதிர்க்க எந்த டெமக்ராட் குடுமி அகப்படுவான் என்று பலி ஆடு தேடிக் கொண்டிருக்கிறார்கள். சூர்யோதயத்தை விட உத்தரவாதமானது புஷ் வெற்றி என்று பேசிக் கொள்கிறார்கள்.
- சுஜாதா, கணையாழி கடைசி பக்கம், ஜூன் 1991.
November 12, 2008
Balaji Srinivasan
Movies
No Comments
I read Vikas Swarup’s Q&A a couple of years ago. I remember reading it in one night. It is the kind of page turner that is hard to put down, but hardly worthwhile fiction. It is an Arabian Nights meets Quiz Show thriller. The writing style was banal. My interest in that book quickly died as I flipped the pages to finish it and hardly thought about it ever since.
The book has been adapted into a movie, Slumdog Millionaire, directed by Danny Boyle (remember Trainspotting and forget his awful The Beach). The film is only loosely adapted from Q&A, and that is a good thing. The screenplay also picked up bits and pieces from Suketu Mehta’s Maximum City. Music is by A.R.Rahman, who collaborated with M.I.A on this one. Rahman’s score is also being pushed for an Oscar nod.
The end result is a film that won the People’s Choice Award at Toronto film festival and got great reviews at Telluride. Several critics including Roger Ebert have called it an Academy Award best picture contender! The film is being compared to “City Of God” and seems to take you on one heck of a ride. Check it out.
Now, did you ever think that one day Anil Kapoor would star in an Oscar contender?
November 4, 2008
Balaji Srinivasan
International Politics
No Comments
I will be hosting an hour of election analysis, what it means to local Indian community, look at some of the hotly contested propositions in California and other relevant topics related to the election today. The show is from 7.30 am to 8.30 am PST, Wednesday Nov 5, in KZSU Stanford 90.1 FM. To listen live, click here. To call in with your comments (we need ‘em! ), call +1 650 723-9010 .