SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Latest SOTDs will be posted here.

Moderators: Murali Venkatraman, Saravanan

SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby bb » Wed Jan 14, 2009 12:02 am

Song of the Day: kaNNil paarvai from naan kadavuL.

http://www.dhool.com/sotd2/988.html

Listen Image

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

புது வருடம், புது ஆரம்பம். சென்ற வருடம் மிக வேகமாக சென்றுவிட்டது. பல நாட்களாயிற்று புதிதாக வந்த பாடல்களைக் கேட்டு. அவ்வப்போது டி.வியில் பார்த்தால் சரி. நேரம் கிடைத்த போதெல்லாம் கர்னாடக இசையையே கொஞ்சம் கேட்டேன். சினிமா பாடல்களைக் கேட்க ஏதோ ஒரு ஆயாசம். அப்படியே கேட்டாலும் பல்லவி முடிந்தவுடன் சரணத்தை கேட்க பொறுமை இல்லாமல் அடுத்த பாடலுக்கு செல்லும் அவசரம். அப்படி ஒரு சுழற்சி 2008-இல்.

புதிய வருடத்தில் விட்டதை பிடிக்கலாம் என்று ஆரம்பித்து பல பாடல்களை என் ஐபாடில் ஏற்றினேன். நீண்ட பயணம் ஒன்றில் எல்லா பாடல்களையும் கேட்க, மனதில் நின்றதோ இரண்டு பாடல்கள் தான். ஜோதா அக்பரில் "க்வாஜா"வும் நான் கடவுளில் "கண்ணில் பார்வை"யும்.

இந்த இடைவேளையில் ஒரு பாட்டை ரசிக்கும் தன்மையும் அதை சீர்தூக்கி பார்க்கும் விதமும் வெகுவாக மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. முன்பெல்லாம், ஒரு பாட்டில் இருக்கும் விஷயங்களை வைத்துத் தான் அதை எடை போட்டேன் போலும். அதில் வரும் பின்னணி இசையோ, பாடகர்களின் குரலோ, பாட்டின் வரிகளோ.. அவற்றை ஆழமாக கவனித்து ரசிப்பேன். எத்தனையோ பாடல்களை இளையராஜாவின் இசைக்காகவும் எஸ்.பி.பியின் குரலுக்காகவும் மணிக்கணக்காக கேட்டது இதனால் தான்.

இப்போதோ அதெல்லாம் முக்கியமில்லை என்பது போலத் தோன்றுகிறது. பாடல் என்னை பாதிக்க வைக்க இவை எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது, பாடலோடு முடிவடைவதில்லை. அதைத் தாண்டி, என்னுள்ளில் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த உள்ளுணர்வைத் தூண்டுகிறது. இது முற்றிலும் subjectiveஆன விஷயம். பாடலை ரசிப்பதில் உள்ள objectivity இம்மியளவு கூட இல்லாமல் மறைந்து போய் விட்டது போல ஒரு பிம்பம்.

"கண்ணில் பார்வை" ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல். இது போல எத்தனையோ பாடல்களை ராஜா இசையமைத்திருக்கிறார். சோகத்தை பிழிய வைத்து, உருக வைக்கும் ஆற்றல் கொண்ட பாடல்கள். ஆரம்பமே ஒரு ஒற்றை சாரங்கியின் மிதமான இசை. கண் பார்வையற்ற ஒரு பெண்ணின் சோகத்தை சொல்லும் சாதாரண வரிகள் (வாலிக்கு வாலண்டரி ரிடையர்மண்ட் தேவை!). இன்னும் செய்திருக்கலாமே என்று சொல்லத் தூண்டும் இசைக் கோர்ப்பு. சரணத்தை அடையும்போது ஏற்கனவே கேட்ட ஒரு ஆயாசம். இதையெல்லாம் objectiveஆக பார்த்தாலும், இதையெல்லாம் தாண்டி, ஆழ்மனதை தொட்டு, நான்கு நாட்களாக நினைவை விட்டு அகலாத பாட்டாகி விட்டது.

இம்மாதிரியான சோகப் பாடல்களை ரசிக்க அவற்றின் பின்புலமாக இருக்கும் படம் நம்மை பாதித்திருக்க வேண்டும். அப்படி ஆகாத போது, எத்தனை நன்றாக இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சிங்காரவேலனில் கூடத் தான் ஒரு சோகப் பாடல் வரும். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். "கண்ணில் பார்வை" கேட்கும்போது அதன் கூடவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பும் சேர்ந்து அதனால் தானோ என்னவோ மனதில் தங்குகிறது. பாலாவின் படங்களில் ஒரு காவிய சோகம் தென்படும். தன் தாய் தன்னை எப்போதும் கொலைகாரனாகவே பார்க்கும் மகனின் ஆதங்கம், நந்தாவின் கடைசி காட்சி வரை மையமாக வரும். தகனம் செய்யப்படும் உடல்களின் நடுவில் உறங்கும் சிறுவனின் பிம்பம், ஆரம்பத்திலேயே பிதாமகன் படத்தின் பின்புலமாக நிற்கும். பாலாவின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஜெயமோகனின் ஏழாம் உலகம் போல. ஏழாம் உலகம் சித்தரிக்கும் உலகம் நாம் அறியாத ஒன்று. அறிந்தாலும் அதன் அவலத்தைப் பற்றி நினைக்காமல் இருந்துவிடுவோம். நினைத்தால் தொண்டை வரண்டு விடும் அளவிற்கு உள்ள அவலம். அத்தகைய படமாக இருக்கும் "நான் கடவுள்". இது வரை இந்த படத்தை பற்றி படித்ததெல்லாம், இது ஏழாம் உலகத்தைப் போல ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சித்தரிக்கும் போலத் தோன்றுகிறது. காசியில் வாழும் அகோரிகளின் வாழ்க்கை இதற்கு முன் எந்த படத்திலும் நாம் பார்த்திராத ஒன்று. கங்கையில் மிதக்கும் பிணங்களின் மிச்சத்தை உண்ணும் அகோரிகர்களின் வாழ்க்கை தான் என்ன! (இதை அப்படியே நேரடியாக படத்தில் காட்ட முடியுமா என்பது சந்தேகம் தான்). நம்முடைய கோட்பாடுகளும் கலாச்சாரத்தின் வாயிலாக அவர்களை எடை போடும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருப்பதனால் தானோ என்னவோ, "கண்ணில் பார்வை" பாடல் என்னை பாதித்துவிட்டது.

- TFMLover has the lyrics here: http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=7976
bb
First Slip
 
Posts: 909
Joined: Sat Apr 19, 2003 9:03 am

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby Anniyan » Wed Jan 14, 2009 3:43 am

bb,

Nalla thamizhukku parattukkaL. Sila idangalil Sujatha kettaar(n).
On the song, a good Rasikhapriya from IR again.

Everthing other than the singer is okay about the song.
Last edited by Anniyan on Wed Jan 14, 2009 8:19 am, edited 1 time in total.
Anniyan
Centurion
 
Posts: 288
Joined: Mon Mar 28, 2005 9:45 pm

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby Nagarajan » Wed Jan 14, 2009 4:13 am

The only nice song from naan kadavuL
Anbudan,
Nagarajan
Has hit a couple of fours
 
Posts: 29
Joined: Fri Oct 29, 2004 12:02 pm

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby vinatha » Wed Jan 14, 2009 9:02 am

OM SIVA....VIJAY PRAKASH ... hamsanandhi ecstacy with rudram ... bhavaa laden singing.

Ran around with the new album whole last week... now crawled back to 80's Ilayaraja :) comfortably as always. COZY. Vinatha.
vinatha
Centurion
 
Posts: 335
Joined: Thu Oct 12, 2006 12:22 pm

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby Ramesh.P » Thu Jan 15, 2009 2:18 am

Hi

resembles old IR song(Chinna Thayaval). I expected much from IR as everyone talks about this film &Nandalaa. Hope BGM will do the magic.

regards
ramesh
Ramesh.P
Centurion
 
Posts: 152
Joined: Mon Mar 28, 2005 10:29 pm

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby SGRK » Fri Jan 16, 2009 7:43 am

BB,

I have always listened to music thae way you listen to it now - trying to 'experience' the music rather than 'listening' actually ! The analysis of course follows, why a song felt good, and why a song did'nt.

Sometimes the analysis does not hold beyond just the personal - as you said 'feeling' is afterall so subjective, and so personal, - once we say personal we being in personality, the baggage of personal experiences so on and so forth. I have therefore decided to blame my indifference to KJY's music on some 'personal defect' within me rather than on KJY's music ! :-)

After all those disclaimers above, Naan kadavul did not move me at all, except the IR rendered oru kaatril. IR has not moved me since 'oLyilE therivadhu dhevadhaiyA'. The SOTD song perhaps would have 'felt' more intense if sung by Chitra or Janaki. (For all of Bhavadharini's technical faults and immature voice, her voice too does touch the soul.) Where is the Shreya of 'more piya' ?
SGRK
Centurion
 
Posts: 110
Joined: Tue Feb 12, 2008 10:50 am

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby bb » Sun Feb 08, 2009 11:06 pm

நானும் பார்த்தேன், வெள்ளிக்கிழமை ராத்திரி 11 மணி ஷோ. எனக்கு
பிடித்திருந்தது.

1. நிறைய இடங்களில் சென்சார் கை வைத்திருந்தது போலிருந்தது. அவ்வப்போது
திடீரென்று வசனமில்லாமல் BGM வரும். director's cut வந்தால் நல்லது.

2. படத்தின் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருந்தது. வேறு எப்படி
முடித்திருந்தாலும் சுமாராக இருந்திருக்கும்.

3. அகோரி ருத்ரன் பூஜாவை காப்பாற்றி அவளுடன் டூயட் பாடாமல் இருந்தது,
அம்மா செண்டிமெண்ட் ரொம்ப கொண்டு வராமல் இருந்தது, வில்லனை கொன்றதும்
நார்மல் வாழ்க்கைக்கு தாவாமல் இருப்பது, feel good ending இல்லாமல்
இருப்பது எல்லாம் தேவலாம்.

4. ஏழாம் உலகம் நாவலை படிக்க எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ, அவ்வளவு கஷ்டமாக
இருந்தது அதன் திரையாக்கத்தைப் பார்க்க.

5. இதில் என்ன மசாலா? இதை மசாலா படம் என்று சொல்பவர்கள் தாராளமாக வில்லு,
படிக்காதவன் எல்லாம் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருக்கட்டும்.
இந்த மாதிரி மசாலா படத்தை நாங்க பார்த்துக்கறோம்.

6. இநத படத்தை விட காமெடியானது, இதுக்கு பா.ராகவன் எழுதியிருக்கும்
அபத்தமான விமர்சனம்.

7. இளையராஜாவின் BGM பல இடங்களில் நேர்த்தி, சில இடங்களில் சொதப்பல்.
தேவை இல்லாமல் பூஜா பாடும்போது வரும் பின்னணி இசை, டைட்டில் பாடல்
(இதுக்கு காசியின் சத்தங்களையே டைட்டிலில் காட்டியிருக்கலாம்), திரும்ப
திரும்ப கேட்ட வயலின்களின் ஆதிக்கம்..

8. அகோரி எல்லாம் ஒரு உருவகமாகவே எடுத்துக்கொள்ளலாம்.
பிச்சைக்காரர்களுக்கு ஒரு தாண்டவன் போனாலும் இன்னும் பல தாண்டவன்கள்
வந்து கொண்டு தான் இருப்பார்கள், இதற்கு முடிவே இல்லை என்று ஒரு
fatalistic approach தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. எந்த பிரச்னையாக
இருந்தாலும் அதற்கு ஒரு feel good முடிவு கொண்டு வர முடியும் என்ற
மணிரத்னம் & கோ வின் பட ஆக்கத்திலிருந்து ஒரு மாறுபட்ட சிந்தனை.

9. ஜெயமோகனின் வசனம் படத்துக்கு பெரிய பலம். ஆனால் இதை ஒரே நேரத்தில்
எழுதி bound script ஆக இருந்திருக்காதோ என்று தோன்றுகிறது. படப்பிடிப்பு
நடக்க நடக்க. படத்தின் கதையும் மாறிக்கொண்டது போல் இருக்கிறது.

10. நல்ல வேளையாக ஆர்யாவை ரொம்ப நடிக்க எல்லாம் விடவில்லை. ஒரு காட்சிப்
பொருள் போலத்தான் படம் முழுவது. இந்த ரோலில் 'தல' நடித்திருந்தால்
(முதலில் அவன் தான் நடிப்ப்தாக இருந்தது), செம காமெடியாக
இருந்திருக்கும்.

- பாலாஜி.
bb
First Slip
 
Posts: 909
Joined: Sat Apr 19, 2003 9:03 am

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby SGRK » Tue Feb 10, 2009 6:02 am

Thanks for the review BB.

Oh, BTW, I forgot that Pithamagan came after Azhagi ! 'Elangathu veesuthey' is so far my last favourite. But I havent listened to Ilayaraja 'particularly' (music release aanadhum muzhu alba-thaiyum udane oru sEra kEtpathu). I thought with a subject like Agori Ilayaraja would have 'poondhu-vilaiyadufied' the BGM throughout. Dissappointed to hear that he has 'sodhappified' in some places.
SGRK
Centurion
 
Posts: 110
Joined: Tue Feb 12, 2008 10:50 am

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby vijay » Tue Feb 10, 2009 12:27 pm

Bala is good at realistically portraying the world his bizarre characters live in, but otherwise I dont see much depth in his films. Pithamagan was a regular love-loss-revenge theme, with the only difference being Vikram's characterization.

and regarding this:
வில்லனை கொன்றதும்
நார்மல் வாழ்க்கைக்கு தாவாமல் இருப்பது, feel good ending இல்லாமல்
இருப்பது எல்லாம் தேவலாம்.

Isnt that what Vikram does in Pithamagan too? walk away after killing the villain?

Just by seeing the trailer I had the gut feeling that Naan Kadavul would be an extension of Pithmagan. Adhula hero poNaththa erippaan. Idhula hero poNaththaye saapadara type, avlodhaan difference :-)

I also hear that the movie actually doesnt spend much time on the life of Aghoris themselves than it does on the beggars(and does it very well I hear). so why all the hype about Arya and Kaasi? The promos make you expect something else. Maybe it was intentional.

And while Bala may not be a masala moviemaker, he does borrow certain ingredients from regular commercial fillms.
The unwanted comedy track with the annoying Laila, the Simran dance, the typical clash with the villian at the end and the good triumphing over evil, idhellam Pithamaganla masala items dhaane :-) He integrates all this cleverly into his films.

I think Nanda was his most uncompromising film up until now. I'll see how Naan Kadavul fares.
vijay
Centurion
 
Posts: 251
Joined: Fri Oct 29, 2004 9:20 am

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby Anniyan » Fri Feb 13, 2009 8:39 am

Kannil paarvai, Pichai paathiram, Om sivoham - IR, welcome back.
Anniyan
Centurion
 
Posts: 288
Joined: Mon Mar 28, 2005 9:45 pm

re: SOTD #988: kaNNil paarvai from naan kadavuL

Postby mythila » Tue Feb 24, 2009 10:46 pm

Such a moving melody in Shreya's mellifluous voice!!
The wailing sarangi bemoans the plight of the blind beggar girl. Raja seems to be smitten by Rasikapriya . He recently used Rasikapriya for Kalaingyar's "ULiyin Oasai" song "agandhaiyil aaduvadhaa"
"Ohm Shivoham" in panthuvaraLi scale is a high octane number which takes me to the edge of the seat. "Maa ganga" is a soothing bhajan in yaman which is present only in the movie Raja's rerecording gives an emotional upheaval throughout the movie
The movie seems to have kicked up controversy of sorts. Writer jeyamohan gives some fresh insights to Bala's "Naan KadavuL" in his blog

http://jeyamohan.in/?p=1869

http://jeyamohan.in/?p=1873
mythila
Well Set, Batting On
 
Posts: 82
Joined: Fri Oct 29, 2004 12:05 am
Location: bangalore


Return to Song Of The Day

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest