maalai nEram dEvan pOtta kOlam ennammA - aNNi en deivam

Lyrics of tamil film songs, updated by Shri, MS and others.

Moderators: Murali Venkatraman, Saravanan

maalai nEram dEvan pOtta kOlam ennammA - aNNi en deivam

Postby priya32 » Wed Dec 07, 2011 6:02 pm

பாடல்: மாலை நேரம் தேவன் போட்ட கோலம்
திரைப்படம்: அண்ணி என் தெய்வம்
இசை: குண சிங்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்
நடந்ததை நினைக்கையில்
மனசுக்குள் இனிக்குது சும்மா
அடிக்கடி அதை எண்ணி தவிக்குது
மனமிது காரணம் என்னம்மா
இது தானே பருவ காலம்
இது ரதிதேவன் கொடுத்த தாகம்

முல்லைப்பூ மலர் உன் நெஞ்சம்
என்றும் அதுதான் என் மஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்நாள் வேண்டும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் வேகம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்

முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்க்கத்தை காட்டுது உந்தன் அணைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ எனை கை தந்து கொண்டோடுது
அது தானே தேவன் லீலை
இனி எந்நாளும் இன்ப மாலை

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்
priya32
Centurion
 
Posts: 1357
Joined: Wed Oct 24, 2007 10:19 am

Return to Lyrics Of Songs

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron