அன்பிற்கினிய தூள் நண்பர்களுக்கு வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இந்த வலைக்குள் வருகிறேன். நன் தமிழ் திரைப்பாடல்களின் வசந்தகாலம் என்று சொன்னால், 70 மற்றும் 80 களின் காலக்கட்டம்தான். பழைய பாடல்கள் மனதில் குடிகொண்டவைகள் என்றுசொன்னால், இந்த 70 , 80 காலகட்டம் மனதை மயக்கியவை என்று சொல்லலாம். இந்த காலத்தையும், பழைய காலத்தையும் தவிர்த்து இடையில் நம் மனதை கொள்ளைகொண்ட 70 மற்றும் 80 களின் காலகட்ட பாடல்களை ஒரே இழையில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இழையை தொடங்குகிறேன். என் தொகுப்பில் உள்ள பாடல்களை mp3 வடிவில் கொடுக்க எண்ணியுள்ளேன். இதில் உங்கள் தொகுப்பில் உள்ள பாடல்களையும் தரவேற்றலாம். மேலும், பதிவிடப்பட்ட பாடல்கள் பற்றிய உங்கள் எண்ணங்களையும், பாடல் விருப்பங்களையும் தாராளமாக கொடுக்கலாம். உங்களின் மேலான ஆதரவினை அன்போடு எதிர்ப்பார்க்கிறேன்.
முதலில் இந்த இழையில் நான் முதலில் கொடுக்க இருக்கும் பாடல்.
படம்: மரியா மை டார்லிங்
பாடல்: ஏன் இந்த திண்டாட்டம் கண்ணா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?gub1ttyp5gtrx1o
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
